9781684879953 Flipbook PDF


14 downloads 121 Views 12MB Size

Recommend Stories


Porque. PDF Created with deskpdf PDF Writer - Trial ::
Porque tu hogar empieza desde adentro. www.avilainteriores.com PDF Created with deskPDF PDF Writer - Trial :: http://www.docudesk.com Avila Interi

EMPRESAS HEADHUNTERS CHILE PDF
Get Instant Access to eBook Empresas Headhunters Chile PDF at Our Huge Library EMPRESAS HEADHUNTERS CHILE PDF ==> Download: EMPRESAS HEADHUNTERS CHIL

Story Transcript

காப்பியாவின் சிறுவர் கைதகள் 1

காப்பியா வாசிப்பகம்

Copyright © Kaappiya Vaasipagam All Rights Reserved. This book has been published with all efforts taken to make the material errorfree after the consent of the author. However, the author and the publisher do not assume and hereby disclaim any liability to any party for any loss, damage, or disruption caused by errors or omissions, whether such errors or omissions result from negligence, accident, or any other cause. While every effort has been made to avoid any mistake or omission, this publication is being sold on the condition and understanding that neither the author nor the publishers or printers would be liable in any manner to any person by reason of any mistake or omission in this publication or for any action taken or omitted to be taken or advice rendered or accepted on the basis of this work. For any defect in printing or binding the publishers will be liable only to replace the defective copy by another copy of this work then available.

ெபாருளடக்கம் முன்னுைர

v

1. நிலாப்பாட்டி

1

2. ஓைலக்கிளி

7

3. நீலத்தாமைர

10

4. நல்ல நண்பர்கள்

15

5. ஓடி வந்த ைபயன்

24

6. கருமித்தனமும் சிக்கனமும்

44

7. விறகுெவட்டியும் நிதிக்குவியலும்

47

8. ேசானாவின் பயணம்

52

9. ெதய்வ அரசு கண்ட இளவரசன்

57

• iii •

முன்னுைர காப்பியா வாசிப்பகம் உயிைரக் காக்க ஓடாத நாள் ேவண்டும் 83 இனப்படுெகாைலக்கு முன் அறவழிப் ேபாராட்டமும், ஆயுதப் ேபாராட்டமும் கலந்திருந்த காலத்திேலேய தைலமைறவு வாழ்க்ைகக்கு தயார் என ஒவ்ெவாருவரும் தனக்குத் தாேன கட்டைள இட்டுக் ெகாண்டனர். உலகின் விடுதைலக்காக ேபாராடும் இயக்கங்களுக்ெகல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் ேபாருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருைக, வளர்ச்சி 83 இல் மக்கேளாடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதைலப் ேபாராட்டத்திற்கு ெபருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்ேபாம் என கிளர்ந்ெதழுந்தார்கள். எல்லாவற்ைறயும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகைவயில் நண்பர்களுடன் ேசர்ந்து சாவதற்கு சத்தியம் ெசய்ேதன். பாலர் வகுப்பு முதல் பல்கைலக்கழகம் வைர என்ேனாடு ெநருங்கிய நண்பர்கள் யாரும் உயிேராடு இல்ைல. இராணுவ ெமாழியில் ெசால்வெதன்றால் அவர்கள் காணாமல் ேபானார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்ெபயர்வான சுற்ேறாடி வாழ்வும் புலம் ெபயர்ந்த வாழ்வும் என் பின்னால் ெதாடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாைதயில் எல்லாவற்றுக்கும் முகம் ெகாடுத்து வாழப் பழகிக் ெகாண்ேடன். மைறந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் ெகாண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழேவா, நிமிர்ந்து வாழேவா பலமும் இல்ைல பயமமுமில்ைல என்ற நிைலயில் உள்ேளன். உடலும் உள்ளமும் தளர்ந்து ேபானாலும் ஏேதா ஒரு நம்பிக்ைகயில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்ைறச் ெசய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் ெதானியில் ேதாணியில் வந்த காலம் கைரகிறது. 85 முதல் இன்று வைர ஓடித்திரியும் வாழ்வில் பல கவிைதகளும் கட்டுைரகளும் காணாமல் ேபானது. இதழ்கைள ேதடுவதும் சாத்தியமில்ைல. இதழ் நடத்தியவர்களும் ேசகரிப்பாளர்களும் உயிேராடு இருந்தால்தாேன ேதடுவதற்கு. வாழ்வதற்ேக ேபாராடும் மனிதர்களிடத்தில் எைதத் ேதடி அைலவது. நான் ேசகரித்த நூலகமும் எழுதியைவகளும் காலப்ேபாக்கில் அனலிலும் புனலிலும் கைரந்தது ஒரு பக்கம் என்றால், ேபரினவாத அரசால் பத்திரிைக சுதந்திரமும் எழுத்தாளர்களும் தைட ெசய்யப்படுவதும், ெகால்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வைர ெதாடர்ந்த வண்ணம் இருக்ைக•v•

முன்னுைர

யில், நானும் என் கவிைதகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளாேனன். எல்லாவற்ைறயும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்ைக மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது. தமிழக மக்களுக்கு ஈழப் ேபார் குறித்த வாழ்ைவயும் ேபரினவாத அரசால் நாளாந்தம் மக்கள் படும் ேபரவலத்ைதயும் ஒரு நூறு கவிைதகளாகவும் கைதகளாகவும் ெசால்லியிருக்கிேறன். புலம்ெபயர் வாழ்வில் தமிழகப் பார்ைவைய உைர நைடயாகவும், காதல் கவிைதகளாகவும், நாட்டுப்புறவியல் களச் ேசகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கண இலக்கிய அகராதிக் காப்பியமாகவும், நாடகக்கைலயாகவும், நுண்கைலப் பிரதிகளாகவும், நாேடாடிப் பயணங்களாகவும், கலா சாைல ேபாதகனாகவும், முற்ேபாக்கில்லா கற்ேபாக்கு விருந்தாளனாகவும், ெதாகுப்பதிகாரமாகவும் பதிவு ெசய்திருக்கிேறன். ேமலும் ஆங்கிலத்தில் மூத்தகுடி கலாச்சாரப் பயணங்கள் மற்றும் கல்விப் புலக்கைலப் ேபரதிகார நுட்பவியல் குறித்தும் மைனவி தமிழ் இனியா ெசாற்கைள விைதத்து வருகிறார். புகார்க் காண்டத்திலிருந்து மதுைரக் காண்டம் வந்துள்ள ெகாைட மகன் இமயக்காப்பியன்(6) பைடப்பாக்கப் பணியில் முந்நீர் ேபால் எமக்கு ேபருதவியாக இருக்கிறான். துயரங்களின் சாட்சிகள் மரணிப்பதில்ைல என்கிற காத்திரச் ெசால்லின் சாட்சிகளாய் நாங்கள். கீழடி / உலகின் / மூத்த காலடி எனக்கான உதவிகைள ெசய்யும் குழந்ைதகள் சக்தி என்கிற விடுதைலெவண்பா, சூரியவாசன் என்கிற இலக்கியப்புரட்சியாளன், ரித்திஷா என்கிற நிழலினி, விதுஷி, பார்பி என்கிற ேமானலிக்கும், பாரா முகமாகேவ ேபாய்விட்ட ேஜர்மனியில் வாழும் குழந்ைதகளான பூர்த்திகா என்கிற இதழினி, அரிகரசுதன் என்கிற எளிஞன் ஆகிேயாருக்கும் நன்றி ெசால்ல ேதைவயில்ைல. எக்காலத்திலும் நன்றிக்குரியவர்களாக இருக்கும் என் சின்னத்தாய் ெசல்வி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தாருக்கும் மற்றும் எனது அக்கா பத்மாவதி, தீபாவிற்கும் நன்றிகள் பல. தமிழ்த்ேதசன் இமயக்காப்பியன் குறிப்பு Tamizhdesan Imayakappiyan (தமிழ்த்ேதசன் இமயக்காப்பியன்) என்கிற ஆசிரியர் பக்கத்தில் உள்ள நூல்களின் அச்சுப் பிரதிகள் மிக குைறந்த விைலயில் இந்தியா மற்றும் அயல் நாடுகளிலும் வாங்க கீேழ ெகாடுக்கபட்டுள்ள மின்னஞ்சலுக்கு ெதாடர்பு ெகாள்ளவும். [email protected] நூல்களின் தரம் விவரங்கள்: Sizes 6 x 9 / 8.5 x 8.5 / 8.5 x 11,cream paper, matte finish or glossy cover.,Children books in 100 GSM art papers.,Both ISBN and nonISBN are available.

• vi •

1 நிலாப்பாட்டி -கவிஞர் ெபரியசாமித்தூரன் மிகவும் வயசான கிழவி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு உதவி ெசய்ய யாரும் இல்ைல. ெசாந்தக்காரர்களும் இல்ைல. அவள் தனியாக ஒரு சின்னக் குடிைசயிேல வசித்து வந்தாள். அந்தக் கிழவி யாருைடய வீட்டிற்கும் ேபாக மாட்டாள். யாரும் அவள் வீட்டிற்கு வரவும் மாட்டார்கள். அருகிேலயுள்ள வீட்டுக் குழந்ைதகெளல்லாம் அந்தக் கிழவிைய நிலாப்பாட்டி என்று கூப்பிடுவார்கள். நிலாவுக்குள்ேள யாேரா ஒரு கிழவி, ராட்ைடயில் நூல் நூற்றுக்ெகாண்டிருக்கிறது ேபாலத் ெதரிகிறதல்லவா? அவைளப் ேபால அந்தக் கிழவியும் எப்ெபாழுது பார்த்தாலும் ராட்ைடயிேல நூல் நூற்றுக்ெகாண்டிருப்பாள். அதனால் அவைள நிலாப்பாட்டி என்று குழந்ைதகள் கூப்பிட்டார்கள். அந்தப் ேபராேலேய எல்லாரும் அவைளக் கூப்பிடத் ெதாடங்கி விட்டார்கள். குழந்ைதகள் ைவத்த ெபயேர அவளுக்கு நிைலத்துப் ேபாய்விட்டது. அவளுைடய உண்ைமயான ெபயர் யாருக்குேம ெதரியாது. ஏெனன்றால், அவள் யாரிடமும் அதிகமாகப் பழகுவதும் இல்ைல: ேபசுவதும் இல்ைல. அவள் சதா நூல் நூற்றுக் ெகாண்ேட இருப்பாள். அந்தக் காலத்திேல எந்திரங்கள் இல்ைல. ராட்ைடயால் நூல் நூற்று, அந்த நூைலக்ெகாண்டுதான் துணி ெநய்வார்கள். கிழவி நூல் நூற்று, அைதத் துணி ெநய்பவர்களுக்கு விற்று, அதில் கிைடக்கும் ெகாஞ்சம் பணத்ைதக்ெகாண்டு உணவுப் ெபாருள் வாங்கி, வயிறு வளர்த்து வந்தாள். அவளால் கஷ்டப்பட்டு ேவறு ேவைல ெசய்ய முடியாது. வயதாகி விட்டதால் உடம்பிேல அத்தைன வலுவில்ைல. ஒருநாள் மாைலயிேல நிலாப்பாட்டி நூல் நூற்று விட்டுப் பிறகு அடுப்புப் பற்றைவப்ப தற்குக் ெகாஞ்சம் சுள்ளி எடுத்து வருவதற்காகக் குடிைசையவிட்டு ெவளிேய வந்தாள். அந்தச் சமயத்திேல, அழகான குருவி ஒன்று பயந்து அலறிக்ெகாண்டு அவள் பாதத்தின் அருகிேல வந்து விழுந்தது. அதன்ேமேல பச்ைச, சிவப்பு, நீலம் ஆகிய மூன்று நிறங்களும் அழகாக விளங்கின. தைலயின் உச்சியிேல பட்டுப்ேபாலச் சின்னக் ெகாண்ேடயிருந்தது. நிலாப்பாட்டி குருவிைய அன்ேபாடு ைகயிெலடுத்தாள். குருவியின் காெலான்று ஒடிந்திருந்தது. அதன் ெதாைடயிேல காயம்பட்டு அதிலிருந்து ரத்தம் வடிந்தது. •1•

காப்பியாவின் சிறுவர் கைதகள் 1

“பாட்டி, என்ைனக் காப்பாற்று" என்று ெசால்வது ேபாலக் குருவி பார்த்தது. அதன் உடம்ெபல்லாம் நடுங்கிற்று. நிலாப்பாட்டி, "ஐேயா பாவம்! யாேரா இதன்ேமல் கல்ைல எறிந்திருக்கிறார்கள் ேபாலிருக்கிறது" என்று கூறிக்ெகாண்டு, சில பச்சிைலகைளப் பறித்து வந்தாள். அவற்றிலிருந்து சாற்ைறப் பிழிந்து, காயத்தின் மீது ஊற்றிக் கட்டினாள். ஒடிந்திருந்த காைலயும் ேநராக ைவத்து, அதற்கு ஒரு கட்டுப் ேபாட்டாள். பிறகு, அந்தக் குருவிையக் குடிைசக்குள் ெகாண்டுேபாய். முதலில் ெகாஞ்சம் தண்ணீர் குடிக்க ைவத்தாள். சட்டியிலிருந்து கம்பஞ்சாதம் சிறிது எடுத்து வந்து அதற்குக் ெகாடுத்தாள். அைதச் சாப்பிட்டுவிட்டுக் குருவி அடிபட்ட மயக்கத்தால் அப்படிேய படுத்துத் தூங்கி விட்டது. நிலாப்பாட்டி அந்தக் குருவிையத் தன் குழந்ைதையப் ேபாலக் கவனித்து வந்தாள். சில நாட்களிேல அதற்குக் காயெமல்லாம் ஆறிப் ேபாயிற்று; ஒடிந்த காலும் சரியாகிவிட்டது. இப்ெபாழுது அதனால் பறந்துேபாகவும் முடிந்தது. ெவளியில் ேபாய்த் தனக்கு ேவண்டிய இைரையத் தாேன ேதடிக்ெகாண்டது. ஆனால், அதற்குக் கிழவிையவிட்டுப் பிரிந்து வாழ மனம் வரவில்ைல. அவளுடேனேய குடிைசயில் வாழ்ந்து வந்தது. குருவி காைலயில் எழுந்து இனிைமயாகப் பாடும். அந்தப் பாட்ைடக் ேகட்டுக்ெகாண்ேட மகிழ்ச்சிேயாடு கிழவி எழுந்திருப்பாள். இரவிேல குருவியின் பாட்ைடக் ேகட்டுக் ெகாண்ேட கிழவி தூங்கப் ேபாவாள். இப்படிச் சிலகாலம் ெசன்றது. அதற்குள்ேள கிழவி மிகவும் தளர்ந்து ேபாய்விட்டாள். முதுைமயினாேல அவள் ைககால்கள் ஓய்ந்துவிட்டன. அவளால் ராட்ைட சுற்றக்கூட முடியவில்ைல. அதனால் உணவுப்ெபாருள் வாங்குவதற்குக் காசு, பணம் ஒன்றும் இல்ைல. சில நாள் அவள் பட்டினியாகேவ கிடக்க ேநரிட்டது. சில நாைளக்குக் குடிைசையச் சுற்றி முைளத்திருக்கும் கீைரகைளப் பிடுங்கி, ேவக ைவத்துச் சாப்பிட்டு ஒருவாறு பசிையத் தணித்துக்ெகாள்ளுவாள். சில நாைளக்கு அதுவும் கிைடக்காது. அவள் யாரிடத்திலும் தனது நிைலைமையப் பற்றிச் ெசால்லவில்ைல. இனிேமல் நான் உயிேராடிருந்து யாருக்கு என்ன பயன்? பிறரிடத்திேல உதவி ெபற்று வாழ்வது இழிவானது‘ என்று நிைனத்துக்ெகாண்டு ேபசாமல் படுத்திருப்பாள். குருவிக்கு அவள் நிைலைமையப் பார்த்து மனம் ெபாறுக்கவில்ைல. அதற்கு அழுைகயாக வந்தது. நிலாப்பாட்டி பசிேயாடு படுத்திருந்தால் இதுவும் அவள் பக்கத்திேல ேபாய்ப் படுத்துக்ெகாள்ளும்; இைர ேதடப் ேபாகாது. கிழவி அைத அன்ேபாடு நீவிக் ெகாடுத்துவிட்டு, "நீ ேபாய் இைர ேதடிச் சாப்பிட்டு வாடா, கண்ணு, எனக்காக நீ பட்டினியாகக் கிடக்காேத. உன்ைனப் பார்த்தும் உன்னுைடய பாட்ைடக் ேகட்டும் தான் நான் இப்ேபாது சந்ேதாஷப்படுகிேறன். உன் உடம்ைபக் ெகடுத்துக்ெகாள்ளாேத” என்று குழந்ைதயிடம் ெசால்வது ேபாலச் ெசால்லுவாள். நிலாப்பாட்டிக்கு எப்படியாவது உணவு கண்டுபிடிக்க ேவண்டும் என்று அந்தக் குருவி துடியாய்த் துடித்தது. யாரிடமாவது நிலாப் பாட்டியின் நிைலைமைய எடுத்துச் ெசால்லலாமா என்றால், குருவிக்கு எப்படிச் ெசால்லுவெதன்று ெதரியவில்ைல. அதனுைடய ேபச்சு மனிதர்களுக்குப் புரியாது. ஆனால், எப்படியாவது பணம் கண்டு பிடித்து அவளுக்குக், ெகாடுக்க •2•

காப்பியா வாசிப்பகம்

ேவண்டும் என்று குருவி முடிவு ெசய்தது. பணம் கிைடத்தால் நிலாப்பாட்டியின் கவைலெயல்லாம் தீர்ந்து ேபாகும். அவளுக்குச் ேசாறு கிைடத்துவிடும். இந்த எண்ணம் ேதான்றியதும் குருவி பணம் ேதடப் புறப்பட்டது. நாள் ேதாறும் காைலயிலிருந்து மாைல வைர எங்ெகங்ேகா சுற்றி அைலந்தது. கைடசியிேல ஒரு நாள், அந்தக் குருவி தன் மூக்கிேல ஒரு தங்கக் காைச ைவத்துக்ெகாண்டு நிலாப்பாட்டியிடம் பறந்ேதாடி வந்தது. அந்தக் காைச அவளுைடய பாதத்தருகில் ேபாட்டுவிட்டு அளவில்லாத மகிழ்ச்சிேயாடு துள்ளித் துள்ளிக் குதித்தது. ஆனந்தமாகப் பாடிக்ெகாண்ேட நிலாப்பாட்டிையப் பார்த்தது. நிலாப்பாட்டிக்கு அந்தக் குருவியின் அன்ெபல்லாம் புரிந்துவிட்டது. தான் பட்டினி கிடக்கக்கூடாது என்பதற்காகக் குருவி எங்கிருந்ேதா அந்தத் தங்கக் காைசக் ெகாண்டு வந்திருப்பைத அவள் அறிந்துெகாண்டாள். அைதக் ெகாண்டுேபாய்க் கைடயில் மாற்றி உணவுப் ெபாருள்கள் வாங்கிக்ெகாள்ள ேவண்டும் என்பது குருவியின் ஆைச என்பைதயும் ெதரிந்துெகாண்டாள். அவளுக்குக் குருவியின் ேமல் இன்னும் அன்பு அதிகமாயிற்று. ஆனால், நிலாப்பாட்டி அந்தத் தங்கக்காைசத் தனக்காக எடுத்துக் ெகாள்ள விரும்பவில்ைல. ’இது யாருைடய ெசாத்ேதா. இைத நான் எனக்காகப் பயன்படுத்தினால் கடவுள் அைதச் சரிெயன்று நிைனக்கமாட்டார். இதுவைரயில் நான் யாருைடய ெபாருைளயும் எனக்காக எடுத்துக்ெகாள்ளவில்ைல. சாகப்ேபாகிற வயசிேல அப்படிச் ெசய்யலாமா?' என்று அவள் எண்ணினாள். நீண்ட ேநரம் இப்படி நிைனத்துப் பார்த்து, அந்தத் தங்கக் காைசத் தான் ைவத்துக் ெகாள்ளக்கூடாது என்று நிலாப்பாட்டி முடிவு ெசய்தாள். ஆனால், அந்தக் காைச என்ன ெசய்வது? அதற்காக மறுபடியும் எண்ணமிடத் ெதாடங்கினாள். அந்த ஊைர ஆண்ட அரசன் மிகவும் நல்லவன். அவன் ஒரு ஏற்பாடு ெசய்திருந்தான். ஏைழகளுக்குச் ேசாறு ேபாடவும், ஒரு ெபரிய ஏரியுண்டாக்கி அதிலிருந்து தண்ணீைர நிலங்களுக்குப் பாய்ச்சவும் பணம் நிைறய ேவண்டி யிருக்கிறெதன்றும், ெசல்வமிருப்பவர்கள் தாராளமாகப் பண உதவி ெசய்ய முன்வர ேவண்டு ெமன்றும் மக்களுக்குத் ெதரியப்படுத்தியிருந் தான். கிழவிக்கு அது இப்ெபாழுது நிைனவுக்கு வந்தது. அரசன் ஒரு ெபரிய உண்டிப் ெபட்டிைய அந்த ஊர்க் ேகாவிலிேல ைவத்திருந்தான். விருப்பமிருந்தால் யார் ேவண்டுமானாலும் ேகாவிலுக்குச் ெசன்று, அதிேல பணம் ேபாடலாம். அப்படிக் கிைடக்கும் பணத்ைதக்ெகாண்டு ஏரி உண்டாக்க அரசன் எண்ணியிருந்தான். “குருவி ெகாண்டுவந்த தங்கக் காைச அந்த உண்டியிேல ேபாட்டால் எத்தைனேயா ஏைழ களுக்கு உணவு கிைடக்கும். ஏரியுண்டாக்கி நாட்ைடச் ெசழிப்புள்ளதாகச் ெசய்யவும் அது உதவியாக இருக்கும்” என்று நிலாப்பாட்டி கருதினாள். அதனால் தள்ளாடித் தள்ளாடி ெமதுவாக நடந்து. ேகாவிலுக்குச் ெசன்று, அந்தத் தங்கக்காைச உண்டியில் ேபாட்டுவிட்டு வந்தாள். கிழவியின் நல்ெலண்ணத்ைத அறிந்து குருவி ெபருைமயைடந்தது. இருந்தாலும், தனது எண்ணம் நிைறேவறவில்ைலேய என்று அதற்கு வருத்தம் உண்டாயிற்று. அது மறுநாளும் ஒரு தங்கக் காைசக் ெகாண்டுவந்து நிலாப்பாட்டியின் முன்னால் ேபாட்டது. அந்தக் காைசக்ெகாண்டாவது நிலாப்பாட்டி உணவுப்ெபாருள் வாங்கிக் ெகாள்ள ேவண்டும் என்பது குருவியின் ஆைச. ஆனால், அவள் அைதயும் உண்டியில் ேபாட்டு விட்டாள். •3•

காப்பியாவின் சிறுவர் கைதகள் 1

சில நாட்கள் தினமும் இப்படிேய நடந்து வந்தது. ஒரு நாைளக்காவது அவள் ஒரு தங்கக் காைசத் தனக்காக ைவத்துக்ெகாள்ள மாட்டாளா என்று அந்தக் குருவி துடிதுடித்தது. அதனுைடய ேபச்சிேல என்னெவல்லாேமா ெசால்லிப் பார்த்தது. நிலாப்பாட்டிக்கு அதன் கத்ருது நன்றாகத் ெதரிந்தது. இருந்தாலும் தங்கக் காைசத் தனக்காக எடுத்துக்ெகாள்ள அவள் விரும்பவில்ைல. "கண்ணு, நீ எனக்காக வருத்தப்பட ேவண்டாமடா. நம் நாட்டு மக்கெளல்லாம் சுகப்பட்டால் அதுேவ ேபாதும். இந்த உலகத்துக்குச் சுைமயாக நான் எதற்காக இன்னும் இந்த உடம்ைபக் காப்பாற்றிக்ெகாண்டிருக்க ேவணும்?" என்று அதனிடம் கூறினாள். குருவி விசனத்ேதாடு அவள் ேபச்ைசக் காதிேல வாங்கிக்ெகாண்டது. இப்படியிருக்க, சில நாட்களாக உண்டிைய நாள் ேதாறும் இரவிேல திறந்து பார்க்கும்ேபாது, அதிேல ெவள்ளியாலும் ெசம்பாலும் ெசய்த நாணயங்கேளாடு ஒரு தங்கக்காசும் இருப்பைதப் பார்த்து அரசன் ஆச்சரியமைடந்தான். ஒவ் ெவாரு நாளும் யார் இப்படித் தங்கக் காசு ேபாடுகிறவர்கள் என்று கண்டுபிடிக்க ேவண்டு ெமன்று அரசனுக்கு ஆைசயுண்டாயிற்று. அதற்காகச் சில ஆட்கைள நியமித்து, மைறவாக இருந்து, உண்டியில் பணம் ேபாடுகிறவர்கைளக் கவனிக்கும்படி அவன் ஏற்பாடு ெசய்தான். நிலாப்பாட்டியால் ஒரு நாள் நடக்கக்கூட முடியவில்ைல. பட்டினியாகக் கிடப்பதால் ைக கால்கள் ஓய்ந்துேபாய்விட்டன. இருந்தாலும் அவள் மனம் தளரவில்ைல. அன்று குருவி ெகாண்டுவந்த தங்கக் காைச உண்டியில் ேபாடுவதற்காக அவள் புறப்பட்டாள். பசி மயக்கத்தால் தைல சுற்றத் ெதாடங்கியது. கால்கள் தள்ளாடின. அதனல் அவள் உட்கார்ந்த நிைலயிேலேய, கால்கைளயும் ைககைளயும் ெமதுவாக முன்னால் தைரமீது ைவத்து ைவத்துக் ேகாவிலுக்குப் ேபானாள். உடம்பில் ஏற்பட்டுள்ள தளர்ச்சிையயும், வலிையயும் ெபாறுத்துக் ெகாண்டு, ெமதுவாகக் ேகாவிைல அைடந்து, அந்தத் தங்கக் காைச உண்டியிேல ேபாட்டுவிட ேவண்டும் என்று அவளுக்கு ஆைச. ேகாவிைல அைடந்ததும் அவளுக்கு சந்ேதாஷம் உண்டாகி விட்டது. நல்லெதாரு திட்டத்திற்கு உதவி ெசய்யப்ேபாவைத நிைனத்துப் ெபருைம அைடந்தாள். அவள் கடவுைளக் கும்பிட்டுவிட்டு உண்டியில் தங்கக் காைசப் ேபாடுவைத அரசனுைடய ஆட்கள் கண்டுெகாண்டார்கள். அைத அவர்கள் உடேன அரசனிடம் ெதரிவித்தார்கள். அரசன் இைதக் ேகட்டு ேமலும் ஆச்சரியமைடந்தான். நிலாப்பாட்டிையச் சந்தித்து அவைளப்பற்றி முழு விவரம் ெதரிந்துெகாள்ள ேவண்டும் என்று நிைனத்தான். இந்த அரசன் மிகவும் நல்லவன். மக்களிடத்தில் அன்புைடயவன். சிறந்த வீரன். அவன் சின்னக் குழந்ைதயாக இருந்தேபாது அவனுைடய தந்ைத அரசாட்சி ெசய்து வந்தார். அப்ேபாது பைகவர்கள் அந்த ஊைரயும் ேகாட்ைடையயும் திடீெரன்று எதிர்த்து வந்து தாக்கினார்கள். தந்ைதயால் பைகவர்கைளத் ேதாற்கடிக்க முடியவில்ைல. ஏெனன்றால், பைகவர்களுைடய ேசைன மிகப் ெபரியதாக இருந்தது. அதனால் அவனுைடய தந்ைத வீரத்ேதாடு சண்ைட ெசய்தும் பயனில்லாமற் ேபாயிற்று. அவர் உடம்பில் பல இடங்களில் காயமைடந்து ேபார்க்களத்திேலேய இறந்து ேபானார். பைகவர்கள் ேகாட்ைடையப் பிடித்துக்ெகாண்டார்கள். ஆனால், சின்னக் குழந்ைதயாக இருந்த இந்த அரசன் அவர்களிடம் சிக்கவில்ைல. யாேரா சில ேபர் அவைன இரகசியமாக அந்த ஊரிலிருந்து எடுத்துக்ெகாண்டு ேபாய், ேவறு யாருக்கும் ெதரியாமல் வளர்த்து வந்தார்கள். அவனுக்கும் தான் அரச குமாரன் என்பது •4•

காப்பியா வாசிப்பகம்

ெதரியாது. அவனுக்கு இருபது வயதான ேபாதுதான் அவனிடம் உண்ைமையச் ெசான்னார்கள். அவன் உடேன ஒரு ேசைனையத் திரட்டி வந்து, பைகவர்கைள எதிர்த்துப் ேபாரிட்டு, அவர்கைள ஊைரவிட்டு விரட்டியடித்தான். அவேன அரசனும் ஆனான். மக்கெளல்லாம் அவனுைடய வீரத்ைதக் கண்டு மகிழ்ச்சியைடந்தார்கள். இப்படிப்பட்ட வீரனான அந்த அரசன், மறுநாள் காைலயில் நிலாப்பாட்டிையத் ேதடிக் ெகாண்டு அவளுைடய குடிைசக்ேக வந்து விட்டான். “பாட்டீ, உனக்கு இந்தத் தங்கக்காசு ஏது ? எதற்காக இைத உண்டியில் நாள் ேதாறும் ேபாடுகிறாய்?” என்று அவன் ேகட்டான் . நிலாப்பாட்டிக்கு அரசைனப் பார்த்ததும் முதலில் ெகாஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவள் குற்றெமான்றும் ெசய்யாதவளாைகயால் அவளுைடய பயம் விைரவில் நீங்கி விட்டது. குருவி தனக்கு எங்கிருந்ேதா தங்கக் காசு ெகாண்டுவந்து ெகாடுக்கிறைதயும், அைத அவள் தனக்காக ைவத்துக்ெகாள்ளாமல் உண்டியில் ேபாடுவைதயும் அரசனுக்குத் ெதளிவாகக் கூறினாள். அரசனுக்கு உண்டான ஆச்சரியத்ைதச் ெசால்ல முடியாது. அவன் நிலாப்பாட்டிைய மரியாைதேயாடும் அன்ேபாடும் பார்த்துக் ெகாண்டு நின்றன். அந்த ேவைளயில், ெவளிேய ேபாயிருந்த குருவி, தன்னுைடய மூக்கில் ஒரு தங்கக் காைசக் ெகாண்டுவந்து நிலாப்பாட்டியின் முன்னால் ைவப்பைதயும் அவன் பார்த்தான். கிழவி ெசால்வது உண்ைம என்று அவனுக்குத் ெதரிந்துவிட்டது. பிறகு, அரசன், அந்தக் குருவி எங்கிருந்து தங்கக் காசு ெகாண்டுவருகிறது என்று கண்டு பிடிக்க ேவண்டுெமன்று நிைனத்தான். அதற்காக மிகவும் திறைமசாலிகளான சில ேபைர அவன் ெபாறுக்கி எடுத்தான். அந்தக் குருவி காைலயில் எழுந்தவுடன் எங்ெகல்லாம் ேபாகிறது என்று ெதரிந்து ெகாள்வதற்காக, அதன் பின்னால் எப்படி யாவது ெதாடர்ந்து ெசன்று கவனிக்கும்படி ஏற்பாடு ெசய்தான். அந்த ஊைரச் ேசர்ந்த ேகாட்ைடச்சுவர் மிகப்பழைமயானது. அரசனுைடய முன்ேனார்கள் பல ஆண்டுகளுக்கு முன்னாேல அைதக் கட்டியிருந்தார்கள். அந்தக் ேகாட்ைடயின் சுவரிேல, எங்ேகா ஒரு பக்கத்தில், சிறிதாயிருந்த ஒரு ெபாந்துக்குள் அந்தக் குருவி நுைழவைதயும், அப்படி நுைழந்துவிட்டு ெவளியில் வரும்ேபாது தங்கக்காசு ஒன்ைற மூக்கில் ைவத்திருப்பைதயும் ஒருவன் மூன்று நாட்களிேல கண்டுபிடித்து விட்டான். அவன் அைத உடேன அரசனுக்குத் ெதரிவித்தான். அரசனுக்கு ஆச்சரியம் ேமலும் அதிகமாகிவிட்டது. பல ேபர் அவனிடம் கூறியிருந்த ஒரு ெசய்தியும் அவனுைடய நிைனவுக்கு அந்தச் சமயத்தில் திடீெரன்று வந்தது. அதனால் அவன் அந்த மதில் சுவைரப் பரிேசாதிக்க ஆட்கேளாடு விைரந்து ெசன்றான். ேவைலக்காரர்கைள விட்டு அந்தப் ெபாந்திருந்த இடத்திேல சவைர இடிக்கும்படி உத்தரவு ெகாடுத்தான். ேவைலக்காரர்கள் அப்படிேய இடித்தார்கள். அதற்குள்ேள, ஒரு பித்தைள அண்டாவிேல நிைறயத் தங்கக் காசும் தங்க நைககளும் இருந்தன. அந்தக் ேகாட்ைடைய இந்த அரசனுைடய தந்ைத ஆண்ட காலத்தில் பைகவர்கள் பிடித்துக்ெகாண்டார்களல்லவா ? அப்படிப் பிடிப்பதற்கு முன்னல் இந்த அரசனுைடய தந்ைத யாருக்கும் ெதரியாமல் அரண்மைனயிலிருந்த விைலயுயர்ந்த ெபாருள்கைளெயல்லாம் இப்படி எங்ேகேயா மைறத்து ைவத்துவிட்•5•

காப்பியாவின் சிறுவர் கைதகள் 1

டதாகப் பல ேபர் ெசால்லிக்ெகாள்வார்கள். அரசனும் அந்தப் ேபச்ைசக் ேகட்டிருக்கிறான். ஆனால் இது, வைரயில் அந்தப் ெபாருள்கள் எங்கிருக்கின்றன என்று யாருக்கும் ெதரியவில்ைல. குருவியின் உதவியால் அைவ இப்ெபாழுது அரசனுக்ேக கிைடத்துவிட்டன. அைதக்ெகாண்டு ஏரியுண்டாக்க அரசன் உடேன ஏற்பாடு ெசய்தான். அதற்கு "நிலாப் பாட்டி ஏரி" என்று ெபயரிட ேவண்டுெமன்றும் முடிவு ெசய்தான். நிலாப்பாட்டிைய அரசன் ெவகுவாகப் புகழ்ந்தேதாடு அவைள அரண்மைனயிேலேய வந்திருக்கும்படியாகக் ேகட்டுக்ெகாண்டான், ஆனால், நிலாப்பாட்டி தனது குடிைசைய விட்டுப் ேபாக இைசயவில்ைல. “இந்தக் குருவியும் நானும் இங்ேகேய சந்ேதாஷமாக இருக்கிேறாம். எங்களுக்குப் ெபரிய வீடு எதற்கு?” என்று அவள் கூறிவிட்டாள். நிலாப்பாட்டியின் வசதிக்காகவும் உணவிற்காகவும் அரசன் எல்லா ஏற்பாடுகைளயும் ெசய்து ைவத்தான். குருவிக்கு இப்ெபாழுது ஒேர மகிழ்ச்சி. இனிைம இனிைமயாகப் பாடிக் ெகாண்ேட இருந்தது. அந்த ஊர் மக்களுக்கு நிலாப்பாட்டிையப் பற்றி நன்றாகத் ெதரிந்து விட்டது. அதனால் பல ேபர் ஒவ்ெவாரு நாளும் அவைளப் பார்த்துப் ேபசவும், அவளுக்கு வணக்கம் ெதரிவிக்கவும் வரத் ெதாடங்கினார்கள்.

•6•

2 ஓைலக்கிளி -கவிஞர் ெபரியசாமித்தூரன் கூைட, முறம் கட்டுகின்றவர்கைளப் பார்த்திருக்கிறீர்களா? மூங்கிைல நீள நீளமான தப்ைபகளாகவும் ஈர்க்குகளாகவும் கிழித்து அவற்ைறக்ெகாண்டு கூைட பின்னுவது ஆச்சரியமாக இருக்கும். அப்படிச் ெசய்கின்ற பல ேபர்கள் ேசர்ந்த ஒரு கூட்டம் இருந்தது. ஆண்கள், ெபண்கள், குழந்ைதகள் எல்ேலாரும் அதிேல இருந்தார்கள். அவர்கள் ஊர் ஊராகச் ெசன்று, ஒவ்ேவார் ஊரிலும் சில நாள்கள் தங்குவார்கள். தங்கி அங்ேக தங்கள் ெதாழிைலச் ெசய்வார்கள். அவர்களுக்கு வீடு ஒன்றும் கிைடயாது. ேபாய்த் தங்குகிற இடத்தில் கூடாரங்கூடப் ேபாட்டுக்ெகாள்ள மாட்டார்கள். வீடும் கூடாரமும் அவர்களுக்கு ேவண்டியதில்ைல. நல்ல நிழல் ெகாடுக்கும்படியான ஒரு ெபரிய மரம் இருந்தால் ேபாதும். அதனடியில் தங்கித் தங்கள் ெதாழிைலச் ெசய்து வயிறு வளர்ப்பார்கள். மூங்கிலில் ேவைல ெசய்வதும் ேசாறு சைமத்துச் சாப்பிடுவதும் மரத்தடியிேலதான். அவர்கள் நீளமான மூங்கில்கைள ஒரு கற்ைறயாகக் கட்டிக்ெகாண்டு வந்திருப்பார்கள். அந்த மூங்கில் களும் அவற்ைற ேலசான தப்ைபகளாகவும், ஈர்க்குகளாகவும் கிழிப்பதற்கு உபேயாகமாகும் கத்திகளுந்தாம் அவர்களுைடய ெசாத்து. சைமயல் ெசய்வதற்குச் சட்டிபாைனகள் சிலவும் ைவத்திருப்பார்கள். ஊராருக்குத் ேதைவயான கூைட, முறம், தட்டம் முதலான சாமான்கைளச் ெசய்து ெகாடுத்துக் காசும் தானியமும் சம்பாதிப்பார்கள். இப்படிப்பட்ட அந்தக் கூட்டத்திேல ஒரு கிழவியும் ஒரு சிறு ைபயனும் இருந்தார்கள். கிழவி ைபயனுக்குப் பாட்டி. அவன் குழந்ைதயாக இருந்தேபாேத அவனுைடய அப்பாவும் அம்மாவும் இறந்துேபானார்கள். பாட்டிக் கிழவிதான் அவைனக் காப்பாற்றி வளர்த்து வந்தாள். ஆனால், வயதாக ஆகக் கிழவியால் மூங்கிைலத் தப்ைபயாகக் கிழித்துக் கூைட முறம் கட்ட முடியவில்ைல. அவள் ைககள் தளர்ந்து ேபாய்விட்டன. ஓர் ஊரிலிருந்து ேவேறார் ஊருக்குப் ேபாவேத அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அந்தக் கூைடமுறம் கட்டும் உறவினர்கைள விட்டுப் பிரிய முடியுமா ? பிரிந்தால் அவளுக்கு ேவறு துைண யாரும் இல்ைல. அதனால் எப்படிேயா கஷ்டப்பட்டு அவர்களுடன் ெசல்லுவாள். அந்தச் சிறு ைபயைனயும் அவேள தூக்கிக்ெகாண்டு ேபாவாள். சில சமயங்களிேல அவ்விடத்திேல இரக்கங்ெகாண்டு சில ேபர் அந்தப் ைபயைனத் துரக்கிக்ெகாண்டு வர உதவி •7•

காப்பியாவின் சிறுவர் கைதகள் 1

ெசய்வார்கள். கிழவியால் ஊருக்குள்ேள தினமும் சுற்றிக் கூைட முறங்கைள விற்கவும் முடியாது. சிறுவனாலும் நடக்க முடியாது. ஆதலால், அவர்கள் இரண்டு ேபரும் மரத்தின் அடியிேலேய இருப்பார்கள். மற்றவர் அைனவரும் ஊருக்குள்ேள ேபாய்த் தாங்கள் ெசய்த கூைட முறங்கைள விற்பார்கள். கிழவியால் கூைட முறம் ெசய்ய முடியாவிட்டாலும் பைனேயாைலையக்ெகாண்டு அழகான விைளயாட்டுப் ெபாம்ைமகள் ெசய்வதிேல அவள் ெகட்டிக்காரி. ஓைலையப் பலவைகயாகக் கிழித்தும், நறுக்கியும் அவள் ெபாம்ைமகள் ெசய்வாள். கிலுகிலுப்ைப உங்களுக்குத் ெதரியுமா ? அதற் குள்ேள சிறிய கற்கைளப் ேபாட்டிருப்பார்கள். கிலுகிலுப்ைபைய ஆட்டினால் கிலுகிலு என்று சத்தம் உண்டாகும். அைதப் ேபால அவள் ேவறு விைளயாட்டுச் சாமான்களும் ெசய்வாள். சிறுவன் அவளுக்குப் பக்கத்திேல உட்கார்ந்து அவள் ெசய்வைதெயல்லாம் ஆவேலாடு பார்த்துக் ெகாண்டிருப்பான். அவன் ெபயர் தங்கேவல். கிழவி அவைனச் ெசல்லமாகத் தங்கம் என்று கூப்பிடுவாள். ஒரு சமயம் இந்தக் கூைடமுறம் ெசய்கிறவர்கள் கூட்டம் ஒரு சிறு கிராமத்திேல வந்து தங்கியது. அந்த ஊரிேல பணக்காரர்கள் நிைறய உண்டு. குழந்ைதகள் புதிய புதிய விைளயாட்டுப் ெபாம்ைமகள் ேவண்டும் என்று ேகட்டார்கள். கிலு கிலுப்ைப அவர்களுக்குப் பிடிக்கவில்ைல. அதனால் அந்தக் கிழவி புதிதாகக் கற்பைன பண்ணி ஓைலயாேல பின்னி ஓர் அழகிய கிளி ெசய்தாள். பச்சிைலகைளெயல்லாம் பிடுங்கி வந்து அதற்கு அழகாகப் பச்ைசச் சாயம் ெகாடுத்தாள். ெசம்மண்ைணக் கைரத்துக் கிளியின் முக்குக்கு அழகான சிவப்பு நிறம் ெகாடுத்தாள், அக்தப் ெபாம்ைமக்கிளி பார்ப்பதற்கு உயிருள்ள கிளிையப் ேபாலேவ இருந்தது. அந்த ஊர்க் குழந்ைதகெளல்லாம் அதன்ேமல் ஆைச ெகாண்டார்கள். ஒவ்ெவாரு குழந்ைதயும் தனக்ேக அது ேவண்டும் என்று ேபாட்டி ேபாட்டது. அதனால், கிழவி அைதப் ேபாலேவ இன்னும் பல கிளிகள் ெசய்தாள். அவளுக்குப் பணம் நிைறயக் கிைடத்தது. "தங்கம், இந்தப் பணத்ைதெயல்லாம் ைவத்து உனக்கு நல்ல ெசாக்காய் வாங்கிக் ெகாடுக்கிேறன்" என்று சிறுவனிடம் கிழவி ஆைசேயாடு ெசான்னாள். புதிய ெசாக்காய் ேபாட்டுக்ெகாள்ளத் தங்கேவலுவுக்கு ஆைசதான். இருந்தாலும் பாட்டியின் ேபச்ைசக் ேகட்டு அவன் மகிழ்ச்சி அைடயவில்ைல. அவன் முகம் வாடத் ெதாடங்கியது ஏெனன்றால், அவனுக்குப் பாட்டி ெசய்யும் கிளிகளிடம் அத்தைன ஆைச. அவற்ைற அந்த ஊர்ச் சிறுவர்களும் சிறுமிகளும் வாங்கிக்ெகாண்டு ஓடுவைதப் பார்த்து அவன் மனம் வருந்தினான். அைவெயல்லாம் தனக்ேக ேவண்டும் என்று ஆைசப்பட்டான். "பாட்டீ, இந்தக் கிளிகைள விற்கேவண்டாம்" என்று அவன் கண்ணீர் ெபருக்கிக்ெகாண்டு கிழவியிடம் ெசான்னான். அவளிடம் ெகஞ்சினான். "தங்கம், இந்தக் கிளிகெளல்லாம் நமக்கு எதற்கு? காசிருந்தால் என்ன ேவணுமானாலும் வாங்கலாம். ெபாம்ைம ேசாறு ேபாடுமா?" என்று கிழவி ஆறுதல் ெசான்னாள். இருந்தாலும் சிறுவனுக்குச் சமாதானம் ஏற்படவில்ைல. இவ்வாறு கிழவி கூறிய மறுநாள் காைலயில் ஒரு சிறு ெபண் கிழவியிடம் வந்து தனக்கு ெராம்பப் ெபரிய கிளியாக ேவண்டும் என்று ேகட்டாள். இதுவைரயிலும் யாருக்கும் ெசய்து ெகாடுக்காத அளவில் மிகப்ெபரியதாகத் தனக்குக் கிளிெயான்று ேவண்டும் என்று அவள் •8•

காப்பியா வாசிப்பகம்

ெசான்னாள். அவள் தகப்பனார்தான் அந்த ஊரிேல எல்ேலாைரயும்விடப் ெபரிய பணக்காரர். அவர்களுைடய ெபரிய மச்சு வீடு அந்தக் கூைட முறம் கட்டுேவார் தங்கியிருந்த இடத்திற்கு எதிராகேவ இருந்தது. அதனால் அந்தப் ெபண் ேகட்டதும் ேதாட்டம் இருந்தது. அதிேல நீரூற்றுகள் சிலுசிலு ெவன்று ஓடிக்ெகாண்டிருந்தன: குயில்கள் பாடின; மயில்கள் ஆடின. பச்ைசக்கிளிகள் ெகாஞ்சிப் ெகாஞ்சிப் ேபசின. இவற்ைறெயல்லாம் பார்த்துவிட்டு மகிழ்ச்சிேயாடு தங்கேவல் மறுபடியும் மாளிைகக்குள் நுைழந்தான். இன்பேலாகத்தில் இருப்பதாக அவனுக்குத் ேதான்றியது. அப்படிேய ஒரு பட்டு ெமத்ைத விரித்த கட்டிலிேல அமர்ந்து தைலயைணயில் சாய்ந்தான். சுகமாகத் தூக்கம் வந்தது. அவன் அப்படிேய தூங்கிப்ேபாய்விட்டான். தங்கேவல் மறுபடியும் கண்ைண விழிக்கும்ேபாது பைழயபடி மரத்தின் அடியிேல ஓைலத் தடுக்கின்ேமல் படுத்திருந்தான். ெகாஞ்ச ேநரத்திற்கு முன் அவன் ேமலிருந்த பட்டாைடகைளெயல்லாம் இப்ெபாழுது காேணாம். கிழிந்து ேபான ெபாம்ைமக்கிளி பக்கத்தில் இருந்தது, பாட்டி ெகாஞ்ச தூரத்தில் ெவறுந்தைரயில் படுத்திருந்தாள். தங்கேவலுக்கு முதலில் ெகாஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால் பக்கத்திேல பிய்ந்துேபான அந்தக் கிளிப் ெபாம்ைமையப் பார்த்ததும் மனத்துக்குத் ைதரியம் வந்தது. அந்தப் ெபாம்ைம இருக்கும் வைரயில் மறுபடியும் அந்த மாளிைகக்குப் ேபாகலாம் என்ற நம்பிக்ைக உண்டாயிற்று. தங்கேவலின் நம்பிக்ைக வீண்ேபாகவில்ைல. ஒவ்ெவாரு நாளும் அவன் தூங்கும்ேபாது அந்தக் கிளிப்ெபாம்ைம அவைன எங்ெகல்லாேமா அதிசயமான இடங்களுக்குக் ெகாண்டுேபாவதாக அவன் கனவு கண்டான். அது முதல் பாட்டி புதிய புதிய கிளிப்ெபாம்ைமகள் ெசய்து விற்கும்ேபாது அவன் முன் ேபாலக் கவைலப்படவில்ைல. சந்ேதாஷமாகேவ ஊரிலுள்ள குழந்ைதகளுக்கு அவேன அந்தப் ெபாம்ைமகைள எடுத்துக் ெகாடுப்பான். “இந்தக் கிளி ேமேல ஏறிக்ெகாண்டு என்ேனாடு வருகிறாயா? அழகான முத்து மாளிைகக்குப் ேபாகலாம். அங்ேக விைளயாடலாம்” என்று அவன் ெசால்லிக்ெகாண்ேட கிளிப்ெபாம்ைமையக் குழந்ைதகளுக்குக் ெகாடுப்பான். ஆனால், அவன் ெசால்வது மற்ற குழந்ைதகளுக்கு விளங்காது. ஏெனன்றால், அவர்களுக்குத் தங்கேவலின் கனவுகைளப் பற்றி ஒன்றுேம ெதரியாது. அவன் ெசால்லுகின்ற மாளிைகையப்பற்றியும் ெதரியாது. அதனால் அவர்கள் பதில் ெசால்லாமல் விழித்துக்ெகாண்டிருப்பார்கள். பிறகு தங்கள் வீட்டுக்குப் ேபாய்விடுவார்கள். ஒவ்ெவாரு குழந்ைதயும் கிளிப்ெபாம்ைம வாங்கும் ேபாது தங்கேவல் சந்ேதாஷமைடய ஆரம்பித்தான். தன்ைடய ஓைலக்கிளி பிய்ந்து ேபானதாக இருந்தாலும் அதுதான் மற்ற ஓைலக்கிளிகைளவிட உயர்ந்தது என்று அவன் நிச்சயமாக நம்பினான். அதுதாேன அவைனத் தன் முதுகில் தூக்கிக்ெகாண்டு எங்ெகங்ேகா பறந்து ெசல்கிறது ? கிழவிக்கு இப்ெபாழுது அவனிடத்திேல ெகாஞ்சங் கூடக் ேகாபம் கிைடயாது. “தங்கம் நல்ல ைபயனாகிவிட்டான்; அவன் விைளயாட்டுப் ைபயனாக இல்ைல. இனிேமல் அவன் ெதாழில் ெசய்து பிைழத்துக்ெகாள்வான்” என்று அவள் மனத்திற்குள்ேளேய மகிழ்ச்சியைடந்தாள். இவ்வாறு தங்கேவலும் அவனுைடய பாட்டிக் கிழவியும் சந்ேதாஷமாக வாழ்ந்து வந்தார்கள்.

•9•

Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.