9781685868918 Flipbook PDF


5 downloads 113 Views 7MB Size

Recommend Stories


Porque. PDF Created with deskpdf PDF Writer - Trial ::
Porque tu hogar empieza desde adentro. www.avilainteriores.com PDF Created with deskPDF PDF Writer - Trial :: http://www.docudesk.com Avila Interi

EMPRESAS HEADHUNTERS CHILE PDF
Get Instant Access to eBook Empresas Headhunters Chile PDF at Our Huge Library EMPRESAS HEADHUNTERS CHILE PDF ==> Download: EMPRESAS HEADHUNTERS CHIL

Story Transcript

விஷ்ணு சஹஸ்ரநாமம்

ெமலட்டூர் இரா நடராஜன்

Copyright © Melattur R Natarajan All Rights Reserved. ISBN 978-1-68586-891-8 This book has been published with all efforts taken to make the material error-free after the consent of the author. However, the author and the publisher do not assume and hereby disclaim any liability to any party for any loss, damage, or disruption caused by errors or omissions, whether such errors or omissions result from negligence, accident, or any other cause. While every effort has been made to avoid any mistake or omission, this publication is being sold on the condition and understanding that neither the author nor the publishers or printers would be liable in any manner to any person by reason of any mistake or omission in this publication or for any action taken or omitted to be taken or advice rendered or accepted on the basis of this work. For any defect in printing or binding the publishers will be liable only to replace the defective copy by another copy of this work then available.

எைன ஈன்ற தாய் அறிவின் குறியீடாய் என் தந்ைத வழி காட்டியாய் என் குருஜீ ேகாபாலவல்லி தாசர் எனக்கு எல்லாமாய் ஓங்கி உலகளந்த உத்தமர்

ெபாருளடக்கம் அணிந்துைர

vii

முன்னுைர

xi

1. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்ேதாத்ரம்

1

2. விஷ்ணு சஹஸ்ரநாமம்- பூர்வபாகம்

14

3. ஆயிரம்நாமங்கள்

24

4. விஷ்ணுசஹஸ்ரநாமம் - உத்தரபாகம்

96

•v•

அணிந்துைர ெபாறுப்புத் துறப்பு இந்த புத்தகத்தில் இருக்கும் அைனத்தும் திருடப்பட்டைவேய. ஆனால் ஒேர வித்தியாசம், திருட்ைட ெகாடுத்தவேர, திருடுவைத எனக்கு ெசால்லிக் ெகாடுத்தவர். “என்னிடமிருந்து பலர் திருடியிருக்கிறார்கள். எனேவ, நீ அவர்களிடமிருந்து திருடு, தப்பில்ைல”, என்றார். “நாேன ஒரு திருடன்”, என்று அதிர்ச்சி ைவத்தியம் ெகாடுத்தார். சித்தச்ேசாரன் என்று வடெமாழியிலும், உள்ளம் கவர் கள்வன் என்று ெதள்ளு தமிழிலும் ெசல்லமாக தூற்றப்படும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்தான்அவர். என் அப்பா 91 ஆண்டுகள் இந்த பூவுலகில் வாழ்ந்தார். தனது 17 வயதில் இருேவைளயும் விஷ்ணுசகஸ்ரநாமம் ெசால்ல ெதாடங்கியவர், தனது கைடசி நாள் வைர ெசால்லிக்ெகாண்டிருந்தார். அவருக்கும் அலுக்கேவ இல்ைல. அைத தினமும் ேகட்ட ஸ்ரீராமபிரானுக்கும் அலுக்கவில்ைல. இங்ேக விட்ட மிச்சத்ைத அங்ேக ைவகுண்டத்திலும் எனது அப்பா ெதாடர்ந்து ெசால்லிக்ெகாண்டிருப்பார் என நிைனக்கிேறன். ஆக ஸ்ரீமன் நாராயணன், ேவறு வழியில்லாமல், ேகட்டுத்தான் ஆக ேவண்டும். எங்கள் பதின்பருவத்தில் (நாங்கள் மூன்று சேகாதரர்கள்) காைலயில் ஒரு தைலயாய கடைம உண்டு. தினமும் கூைட கூைடயாய் பவழமல்லி பூக்கைள ெபாறுக்கிக் ெகாண்டு வந்து, எங்கள் அப்பா ெகாடுக்கும் வாைழநாரில் (பிற்காலத்தில் நூலுக்கு மாறியது) மாைல ேகார்க்க ேவண்டும். குைறந்தபட்சம் மூன்றுமாைலகள். அதில் சற்று அளவில் ெபரியதாக இருப்பது, ஸ்ரீராமபிரானுக்கு. அப்பாவின் கட்டைளக்கு அடிபணிந்து, 30 % விருப்பு, 70% ெவறுப்பு, என்ற கலைவயுடன், மாைலகள் ெதாடுப்ேபாம். எங்களுக்குள்ேளேய அந்த சதவிகிதம் மாறுபடும்.

• vii •

அணிந்துைர

எனக்குள்ேளேயயும்கால, ேநரத்திற்குஏற்றால்ேபாலசதவிகிதம்மாறுபட்டிருக்கிறது. என்னஇருந்தாலும், அந்த குைறந்தபட்ச விருப்பு எங்கள் அடிமனசில் தங்கிவிட்டதால், இன்றும் எங்காவது பழவமல்லியின் வாசைன பின்இரவு ேநரங்களில், அதிகாைலப்ெபாழுதில், எங்கள் நாசிைய வந்தைடயும்ேபாது கிறங்கிக்ேபாகிேறாம். இங்ேக எங்கு விஷ்ணுசகஸ்ரநாமம் வந்தது? என்று நீங்கள் ேகட்கலாம். என் அப்பா விஷ்ணுசகஸ்ரநாமத்ைத வாய்விட்டு ெசால்லுவார். அது, விளக்ெகண்ைணய் குடித்த மனநிைலயில் அமர்ந்துெகாண்டு மாைலகட்டிக்ெகாண்டிருந்த, எங்களில் அடிமனசில் எங்கைள அறியாது பதிந்துவிட்டது. ஒருமுைற அகஸ்மாத்தாக முயற்சி ெசய்து பார்த்தேபாது கடகடெவன, சார்ங்கம் உைதத்த சரமைழேபால, அந்த ஆயிரம் நாமங்கள் வந்து விழுந்தன. ஆச்சர்யப்பட்டுேபாேனன். இது சித்தேசாரனின் லீைல இல்லாமல் ேவெறன்ன? எனக்குசமஸ்கிருதஞானம்துளியும்கிைடயாது. ஆனால்ேவதாந்தவிஷயங்களில்ஒளிந்திருக்கும்நுட்பமானதத்துவங்கைளஉள்வாங்கிக்ெகாள்ளஒருேவட்ைகஎப்ேபாதும்இருந்துெகாண்ேடஇருந்தது. அதற்குஇலக்கியஈடுபாடும்ஒருகாரணமாகஇருக்கலாம். என் குருஜீ திரு ேகாபலவல்லிதாசரின் பல்ேவறு உபன்யாசங்கைள தினமும் ேகட்டு வருகிேறன். அேத மாதிரி திரு ேவளுக்குடி கிருஷ்ணன் அவர்கள், திரு துஷ்யந் ஸ்ரீதர் அவர்களின் உபன்யாசன்கைளயும், இன்னும் சில விடிேயா/ ஆடிேயாக்கைள/டிஜிடல் புத்தகங்கைளயும் பல்ேவறு ஊடகவாயிலாக ேகட்டு/படித்துவருகிேறன். திடீெரன ஒருநாள், இவ்வளவு நாள் நாம் ேகட்ேடாேம, நாம் ெதரிந்து/புரிந்துெகாண்டைத, எளிைம படுத்தி நம் நண்பர்கேளாடு பகிர்ந்துெகாண்டால் என்ன என்று ேதான்றியது. எனேவ திருட ெதாடங்கிேனன். • viii •

அணிந்துைர

இப்ேபாைதக்கு இந்த திருட்டு முடிந்து விட்டது. எதுவும் என்னது இல்ைல. எல்லாம் உங்களிடம் ெகாடுத்துவிட்ேடன். இனி உங்கள் பாடு. அவன் பாடு. எனக்கு எந்தெபாறுப்பும் இல்ைல. ெமலட்டூர். இரா. நடராஜன் 9448118966 [email protected] பின் குறிப்பு இந்த புத்தகத்தில் அடிேயனுக்கு எந்த உரிைமயும் இல்ைல. அைனத்து காப்பிைரட் உரிைமகளும் ெபருமாளுக்ேக இருக்கின்றன.

• ix •

முன்னுைர கீைத என்றாேல பகவத் கீைததான். அேத ேபால சஹஸ்ரநாமம் என்றாேல விஷ்ணு சஹஸ்ரநாமம்தான். பகவத்கீைதைய மனப்பாடமாக ெசால்பவர் ெவகு சிலேர. ஆனால் விஷ்ணுசஹஸ்ரநாமத்ைத மனப்பாடமாக ெசால்பவர்கள் அேனகம். அதாவது, பாகவானால் பக்தனுக்கு ெசால்லப்பட்டைத விட பீஷ்மர் ேபான்ற ஒரு கிருஷ்ணபக்தரால், அவைர சாட்ஷியாக ைவத்துக் ெகாண்ேட, இன்ெனாரு பக்தனுக்கு (யுதிஷ்டிரருக்கு)ெசான்னதுதான் விேஷஷம். இன்னும் பல சிறப்புகள் இருக்கின்றன. ராமானுஜரின் சிஷ்யரான கூரத்தாழ்வாரின் மகனான பராசரபட்டர் தான் எழுதிய பகவத் குண தர்பணத்தில் (பகவானின் குணங்கைள காட்டும் கண்ணாடி) 6 சிறப்புகைள ெசால்லி ஏழாவதாக ஒன்ைறயும் ெசால்கிறார். 1. இது மஹாபாரதத்தின் சாரம் 2. ரிஷிகள் பிரேயாகித்த ஆயிரம் நாமங்கைள உள்ளடக்கியது. 3. ேவதங்கைள பகுத்த வியாசரால் ெசால்லப்பட்டது. 4. கண்ணனின் பரம பக்தனான பீஷ்மாச்சாரியரால் ெதாகுக்கப்பட்டது. 5. இதில் உள்ள நாமங்கள் பல ெபரிேயார்களால் ைகயாளப்பட்டுள்ளன. 6. பகவத் கீைதயின் பல தத்துவங்கைள தன்னகத்ேத ெகாண்டது இைவதான் அந்த ஆறு சிறப்புகள். இைவதவிர, ஏழாவதாக பரம புருஷனான (ேதவகி நந்தன்) கண்ணேன ேகட்டது என்கிறார் பராசரபட்டர்.

• xi •

முன்னுைர

உன் ெபருைமைய நீேய ெசால்லாேத, பிறர் ெசால்லட்டும் என்று நாம் ெசால்கிேறாம் அல்லவா? அது இங்ேக ெபருமாளுக்கும் ெபாருந்துகிறது. சரி, ஏன் இது விஷ்ணு சஹஸ்ரநாமம்? நாராயண சஹஸ்ரநாமமாக ஏன் இருக்க கூடாது? ேகசவ சஹஸ்ரநாமம் என்று ெசால்லலாேம? இதற்கு ஒரு ேவத விளக்கம் ேதைவப்படுகிறது. நாராயாணாய வித்மேஹ வாசுேதவாய தீமஹி. தன்ேனா விஷ்ணு ப்ரேசாதயாது, என்ற ேவத வாக்கியத்தின் படி ெபருமாள் மூன்று விதமான ெலவல்களில் இருக்கிறார். பள்ளி, கல்லூரி, பல்கைலகழகம் என்பது மாதிரி. அதில் அதி உயர்ந்த அடுக்கு, நாராயணன், ைவகுண்ட நாயகர். அடுத்ததாக வாசுேதவன், திருப்பாற்கடலில் பள்ளி ெகாண்டிருப்பவர். எளிைமயானவனர் விஷ்ணு, எங்கும் வியாபித்திருப்பவர். எனேவ நம்ைம ேபான்ற பாமர மக்களுக்கு அனுகூல நாமம் விஷ்ணுதான். ஆகேவ விஷ்ணுசகஸ்ரநாமம். அடுத்து ஒரு ேகள்வி? ஏன் நாமம்? மந்திரங்கள் ெசால்லக்கூடாதா? விஷ்ணு சஹஸ்ர மஹா மந்திரம் என்று ஏன் இருந்திருக்க கூடாது? இதற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் விைட இருக்கிறது. ஒவ்ெவாரு யுகத்திற்கும் வழிபடும் முைறயில் மாற்றம் இருக்கிறது. யுகத்திற்கு யுகம் தர்மங்கள் மாறுபடுவது மாதிரி. க்ருத யுகத்தில் மிக கடினமான மனது ஒருமித்த த்யானங்கள் ெசய்ய ேவண்டும். ஒற்ைறகாலில் நின்று தவம் ெசய்தது பற்றிெயல்லாம் ேகள்விப்பட்டிருக்கிேறாம். மனம் ஒரு குரங்கு அல்லவா? இக்கால மனிதர்களுக்கு த்யானம் கஷ்டம். தவம் ெராம்பேவ கஷ்டம். த்ேரதா யுகத்தில் சற்று தளர்வு (தற்ேபாைதய ெகாேரானா வீட்டுச்சிைற தளர்வு மாதிரி). ஆனால் ெபரும் யக்யங்கள் ெசய்ய ேவண்டும். அைவகைள நிர்வகிப்பது கடினம். பணம் அதிகம் ெசலவாகும். ஆட்பைடகள் ேவண்• xii •

முன்னுைர

டும். ெசய்பவனுக்கும் ெசய்விப்பவர்களுக்கும் அதிசிரத்ைத ேவண்டும். இக்காலத்துக்கு சரி பட்டு வராது. துவாபர யுகத்தில் அர்சைன ெசய்ய ேவண்டும். அதற்கு, பூைஜ ெபாருட்கைள விட ெபாறுைம அதிகம் ேவண்டும். எப்படி ெசய்யேவண்டும் என்பதில் அடிக்கடி குழப்பம் வருகிறது. கைடசியில் அதில் ேபாலித்தனம்புகுந்து, நான் பக்தி ெசய்கிேறன் பார் என்பதில் பிரதான குறிக்ேகாேள அடிபட்டு ேபாய் விடுகிறது. தவிர, நாரில் ெதாடுத்த மாைல கிைடப்பேத அருகி ேபாய் விட்டது. விைல இல்லாமல் பூக்கள் கிைடப்பதில்ைல. அந்த ெபாருட்களில் பக்தி இல்ைல. வியாபரம் மட்டுேம இருக்கிறது. எனேவ அர்ச்சைனயும் அவ்வளவு சுலபமில்ைல. நாலாவது சாய்ஸ் ேவண்டும். கலி யுகத்தில் நாம ெஜபம் மட்டுேம ேபாதும். ெவரி சிம்பிள். கண்ைண மூடிக்ெகாண்டு மணிக் கணக்கில் உட்கார ேவண்டாம். ெநய் ஊற்றி யக்யங்கள் ேவண்டாம். பூக்கைள ேதடி ஓட ேவண்டாம். ஆண்டாள் ெசான்ன மாதிரி வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால் ேபாதும். பஸ்ஸில் ேபாகும் ேபாது ெசால்லலாம். சைமக்கும் ேபாது ெசால்லலாம். படுக்ைகயில் படுத்துக் ெகாண்ேட ெசால்லலாம். இடேமா காலேமா முக்கியமில்ைல. எனேவதான் விஷ்ணு சஹஸ்ர - நாமம். மந்திரங்கள் ேதைவயில்ைல. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் ஆயிரம் நாமங்கைள நாம் வைக படுத்தி பார்த்ேதாேமயானால், அைவ ெபருமாளின் ஐந்து நிைலகைளயும் அவரின் குணங்கைளயும் ெசால்லும். அெதன்ன ஐந்து நிைலகள்? 1. பரம் ( பரமபதம் - ஸ்ரீைவகுண்டம் - 108வது திவ்ய ேஷத்திரம்) 2. வியூகம் (திருப்பாற்கடல் - 107வது திவ்ய ேஷத்திரம்) 3. அவதாரம் - விபவம் (சாதாரணமாக நாம் அறிந்திருப்பது • xiii •

முன்னுைர

10 அவதாரங்கள்தான். ஆனால் ஸ்ரீமத் பாகவதம் பல அவதாரங்கைள கூறுகிறது. கபிலர், தத்தாத்ேரயர், தன்வந்திரி ஆகிேயார் விஷ்ணுவின் அவதாரங்கேள) 4. அந்தர்யாமி - நம் ஹ்ருதயத்துக்குள் இருப்பவர் ( நாராயண சூக்தம், நீல நிற ேஜாதியாக ஒரு கட்ைடவிரல் அளவுக்கு ஒரு தைலகீழ் தாமைர மாதிரி நாரயணனர் இருக்கிறார் என்கிறது) 5. அர்சாவதார மூர்த்தி (நாம் ேகாயில்களில் வழிபடும் சிலா மூர்த்தி. ஆகம விதிகள் முைறயாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் பாரம்பரிய ேகாயில்களில் நாராயணேர ஆவிர்பவிக்கிறார்) இைவதான் ஐந்து நிைலகள். ஆண்டாள் தன் முதல் திருப்பாைவயில், நாராயணேன நமக்ேக பைற தருவான் என்று ெசால்லி பரமபதத்ைத சுட்டிக் காட்டுகிறாள் இரண்டாவது பாசுரத்தில், பாற்கடலுள் ைபய்ய துயின்ற என்று ெசால்லி வியூகத்ைத நிைனவூட்டுகிறாள். மூன்றாவது பாசுரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன் என்று அவதார ைவபவத்ைத ெசால்கிறாள். நாலாவது பாசுரத்தில் ஆழிமைழக்கண்ணா என்று ெநஞ்சுக்குள் அருவமாக இருப்பவைர, ெவளிேய இயற்ைகயின் ஸ்வரூபமாக மைழ ெபாழிவதில் அவைரப் பார்க்கிறாள். கைடசியாக, ஐந்தாவது பாசுரத்தில் வட மதுைர ைமந்தைன, வாயினால் பாடி மனதினால் சிந்தித்து என்று ெசால்லி அவைர அர்ச்சிக்கும் மூர்த்தியாக பாவிக்கிறாள். விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் திருப்பாற்கடல் மாதிரிதான். அைத கைடவது மாதிரி நாம் ஆராய ஆராய, புதுப்புது ெவளிச்சங்கள் வந்துெகாண்ேட இருக்கும். விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களில், அவரின் கல்யாண குணங்கைள ஆறு வைகயாக பிரிக்கலாம்.

• xiv •

முன்னுைர

1. 2. 3. 4. 5. 6.

ஞானம் - knowledge பலம் - Strength ஐஸ்வர்யம் - Wealth சக்தி - Power வீர்யம் - Valour ேதஜஸ் - Brightness

பலம், சக்தி, வீர்யம் ஆகியன எல்லாம் ஒன்று ேபால ேதான்றலாம். சின்ன சின்ன தன்ைமகள் அவற்ைற ேவறுபடுத்திக் காட்டுகின்றன. பலம் உடல் சார்ந்தது. சக்தி உள்ளூர இருந்து உடல் பலத்ைத கூட்டுகிறது. சக்தி ெதாடர்ந்து அதன் தன்ைமைய இழக்காமல் இன்னும் கூடிக்ெகாண்ேட இருந்து உடல் பலத்ேதாடு ஒத்திைசயுமானால் அது வீர்யமாகிறது. இைதெயல்லாம் ெசயல்படுத்த ஞானமும் ேவண்டும். ஐஸ்வர்யமும் ேவண்டும். எல்லாம் ஒன்று ேசரும் ேபாதுதான் முகத்தில் ேதஜஸ் வரும். ஆக ெபருமாளின் 6 கல்யாண குணங்கைள தனித்தனியாக வைக படுத்தினாலும் ஒன்ைற ஒன்று சார்ந்தைவேய. அவர் ஒன்றாகவும் இருக்கிறார். அளவிட முடியாத பலவாகவும் இருக்கிறார் என்பைதப் ேபால. சரி, பகவானின் 6 கல்யாண குணங்கள் என்ெனன்ன என்று பார்த்ேதாம். ஆனால், ஆயிரம் நாமங்களில் ஒருநாமமாக நிர்குணன் என்று ஒன்று உள்ளது. என்ன இது, முரணாக இருக்கிறேத என்று நிைனக்கத் ேதான்றும். ஆனால், இந்த நாமத்ைத எந்தவிதமான தீயகுணங்களும் அண்டாத (அற்ற) குணவானாக பகவான் இருக்கிறார் என்று அர்த்தம் ெகாள்ளேவண்டும் என்று பல விரிவுைரயாளர்கள் கருத்து ெதரிவித்திருக்கிறார்கள். நாமும் அப்படிேய அர்த்தம் ெகாள்ேவாம். விஷ்ணு சஹஸ்ரநாம பல ஸ்ருதிைய ஒட்டுெமாத்தமாக நாம் பார்த்ேதாேமயானால், அைவ ஆறு விேராதிகளிடமிருந்து நம்ைம காப்பாற்றுகின்றன. யார்அந்த 6 விேராதிகள்? • xv •

Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.