9789354901409 Flipbook PDF


86 downloads 117 Views 575KB Size

Recommend Stories


Porque. PDF Created with deskpdf PDF Writer - Trial ::
Porque tu hogar empieza desde adentro. www.avilainteriores.com PDF Created with deskPDF PDF Writer - Trial :: http://www.docudesk.com Avila Interi

EMPRESAS HEADHUNTERS CHILE PDF
Get Instant Access to eBook Empresas Headhunters Chile PDF at Our Huge Library EMPRESAS HEADHUNTERS CHILE PDF ==> Download: EMPRESAS HEADHUNTERS CHIL

Story Transcript

ukiyoto

சிரிப்பின் மிச்சம் எஸ். ரேமஷ் கிருஷ்ணன்

Ukiyoto Publishing







அைனத்து உலகளாவிய ெவளியீட்டு உரிைமகளும்

Ukiyoto Publishing

ேசர்ந்தது

Published in 2021

Content Copyright © Ramesh Krishnan

Cover Art by Mano Kasi

ISBN 978-93-5490-140-9

அைனத்து உரிைமகளும் பாதுகாக்கப்பட்டைவ. இந்த ெவளியீட்டின் எந்த பகுதியும் ெவளியீட்டாளரின் முன் அனுமதியின்றி, எந்த வைகயிலும், மின்னணு, இயந்திர, புைகப்பட நகல், பதிவு ெசய்தல் அல்லது ேவறு எந்த வைகயிலும், எந்த வைகயிலும் மறுஉருவாக்கம், பரிமாற்றம் அல்லது மீட்டெடுப்பு முைறயில் ேசமிக்கப்படக்கூடாது. ஆசிரியரின் தார்மீக உரிைமகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்த புத்தகத்தில் வரும் சம்பவங்கள் அைனத்தும் கற்பைனேய. ெபயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்ச்சிகள், இடங்கள் அைனத்தும் ஆசிரியரின் கற்பைன அல்லது கற்பைனகாக உருவாக்கப்பட்டது, யார் மனைதயும் புண்படுத்துவதாக எழுதப்படவில்லை. உண்மையான நபர்கள், வாழும் அல்லது இறந்தவர்கள் அல்லது உண்மையான நிகழ்வுகளுடன் உள்ள எந்த ஒற்றுைமயும் முற்றிலும் தற்செயலானது.

இந்த புத்தகம் வர்த்தகத்தின் மூலமாகவோ அல்லது ேவறுவிதமாகவோ, ெவளியீட்டாளரின் முன் அனுமதியின்றி, கடன் வழங்கவோ, மறுவிற்பைன ெசய்யவோ, பணியமர்த்தப்படவோ அல்லது ேவறுவிதமாக புழக்கத்தில் விடவோ கூடாது என்ற நிபந்தைனக்கு உட்பட்டு

விற்கப்படுகிறது.

இந்த பைடப்பு Pachyderm Tales உடன் இைணந்து தயாரிக்கப்படுகிறது





www.pachydermtales.com

முன்னுைர

முகநூலில் ெவளியாகிப் பலரின் பாராட்டுகைளப் ெபற்ற சிறுகைதகளின் தொகுப்பான இந்நூைலப் ப தி ப்பி க்க ஆ ர்வ மூ ட்டி அ ைன த்து ஒ த்து ைழ ப்பை யு ம் வ ழ ங்கி ய உ மா அ ப ர்ணா , அவர்களின் புதல்வி லக்ஷ்மிப்பிரியா இருவருக்கும் ம ற்று ம் ேப ச்சி ெட ர்ம் நி று வ ன த்து க்கு ம் எ ன் மனமார்ந்த நன்றிகள். இக்கைதகைளப் பலரும் படித்துப் பாராட்டுக்கைளயும், கருத்துக்கைளயும் பகிர களம் அைமத்துக் கொடுத்த சங்கப் பலைக முகநூல் குழுமத்தையும் தன் அைமப்பாளர்கைளயும் இத்தருணத்தில் நன்றியுடன் நிைனவு கூர்கிேறன்.

அன்புடன் எஸ். ரேமஷ் கிருஷ்ணன்

உள்ளடக்கம்

சிரிப்பின் மிச்சம்

1

சமய விதி

7

ஆலமரத்துக்கைட

19

இறந்த காலங்கள்

26

உணவுச் சுழற்சி

36

விஷமக்காரக் கண்ணி

63

ஒலக்கண்ணீஸ்வரர் கோவில்

72

ைகயில ெவண்ணைக்கட்டி

83

பயிற்சி

91

சுழற்சிக் கைத

101

ஆசிரியைரப் பற்றி

114

சிரிப்பின் மிச்சம் | 1

சிரிப்பின் மிச்சம்

ஒரு கிைளயண்ட் ஆபிசில் நாைள நடக்க இருக்கும் ஆடிட் சம்பந்தமான முன்னேற்பாடுகைள முடித்துவிட்டு தன் ரூமுக்குப் போக பஸ் ஸ்டாப்பில் வந்து நின்ற விமல் வாட்சில் மணிையப் பார்த்தான். மணி நாலைர ஆ கி யி ரு ந்த து . ஒ ரு ஆ டி ட் நி று வ ன த்தி ல் அசிஸ்டண்டாக ேவைல பார்த்துக்கொண்டிருந்தான்… அந்த ேநரத்தில் அவைள அங்கு எதிர் பார்க்கவில்லை.

சிம்பிளான ஒரு பச்சைப் புடைவதான் கட்டி இருந்தாள். அதிக அலங்காரமில்லை. ஆனால் அதிலும் ேதவைத மாதிரி அவன் கண்ணுக்குத் ெதரிந்தாள். அவைன கவனித்த மாதிரிேய ெதரியவில்லை. யாைரயோ எந்திர பார்த்துக் கொண்டிருப்பவள் போலத் தோன்றியது.

ைதரியத்தை வரவைழத்துக் கொண்டு அவள் பக்கத்தில் போய்,

"ஹலோ! என்ன ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா. அதன் அன்னிக்கு ைலப்ரரில... அப்புறம் ஒரு நாள் கல்யாண ம ண்ட ப த்தி ேல பா ர்த்தோ ேம … நீ ங்க கூ ட … " , தடுமாறியபடி உளறினான்.



சீரியஸான முகத்துடன், "உங்கைள நான் எங்கேயும் பார்த்ததில்லே. நீங்க யாருன்னே எனக்குத் ெதரியல"

2 | எஸ். ரேமஷ் கிருஷ்ணன்

"மறந்துட்டிங்களா "

"ெநஜமாேவ உங்கள பாத்த ஞாபகம் இல்லங்க. சாரி."

ேம ேல ேப ச மு ற்ப டு வ த ற்கு ள் அ வ ன் மு து கி ல் பளாெரன்று ஒரு அடி விழுந்தது. தடுமாறியவன் ைகயில் இருந்து ஃைபல் கீேழ விழுந்து ேபப்பர்கள் சிதறின. பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த ஒரு முரட்டு மீைச ஆள் அவன் ேமல் திடீர் தாக்குதல் நடத்துவான் என்று யாருேம எதிர் பார்க்கவில்லை.

"பஸ் ஸ்டாப்ல நிக்கற பொண்ணுன்னா நீ கூப்ட ஒண்ணே வந்துருவான்னு ெநனப்பா", குடித்திருப்பான் போல.

" அ ய்ய ய்யோ அ டி க்கா தி ங்க . அ வ ரு எ ங்கி ட்ட தப்பால்லாம் நடக்கைலங்க", என்று பதறினாள்.

சுற்றி இருந்தவர்களும் வந்து விலக்கி விட்டு, கீேழ சிதறிய ேபப்பர்கைள எடுத்துக் கொடுத்தார்கள்.

அ த ற்கு ள் அ வ ன் போக ேவ ண்டி ய ப ஸ் வ ரவு ம் , நொந்தவனாய் பஸ்ஸில் ஏறியவைன அவள் பார்த்த பார்வையில் பரிதாபம்.

ரூமிற்குள் வந்து படுத்தவன் மனதில் ஒரு பின்னூட்டம்.

வழக்கமாக அவன் ெசல்லும் ெலண்டிங் ைலப்ரரிக்கு அன்றும் போயிருந்தான். ேவெறங்கேயோ பார்த்தவாறு ைலப்ரரி வாசலில் நுைழய முற்பட்டபோது திரும்பிப் பார்த்த நொடியில் எதிரில் அவள். பிங்க் நிற ேசைலயில்

சிரிப்பின் மிச்சம் | 3 ஜொலித்தவாறு வந்தவள் முகத்தில் அப்படி ஒரு புன்னைக.

கி ற ங்கி நி ன்ற வ ன் ப தி லு க்கு ேல சா க ப் பு ன்ன ைக ப்ப த ற்கு ள் அ வ ைனக் க ட ந்து ெச ன்று மைறந்து விட்டாள்.

அதற்குப்பிறகு ெபரும்பாலான ேநரம் அவன் மனைத அந்தப் புன்னைக ஆக்ரமித்திருந்தது.

சில நாள் கழித்து நண்பன் ஒருவன் திருமணத்துக்குப் போ யி ரு ந்த போ து ம் அ ேத போ ல் நி க ழ்ந்த து . ம ண்ட ப த்து க்கு ள் நு ைழ யு ம் மு ன் ப க்க வா ட்டி ல் ைவ த்தி ரு ந்த ேப ன ரி ல் க வ ன ம் ெச லு த்தி வி ட்டு திரும்பியபோது மண்டபத்துக்குள்ளிருந்து நீல நிற பட்டுப் புடைவயில் தங்க விக்கிரகம் போல ெவளியில் வந்து கொண்டிருந்தவள் முகத்தில் அப்போதும் அேத பு ன்ன ைக . ப தி லு க்கு ப் பு ன்ன ைக த்த வ ன் அ வ ள் தாண்டிப் போனபிறகும் கண்ணிலிருந்து மைறயும் வைர அ வ ைள த் தி ரு ம்பி ப் பா ர்த்து க் கொ ண்டி ரு ந்து விட்டுத்தான் மண்டபத்துக்குள் நுைழந்தான்.

அடுத்து அவைள எப்போது பார்க்கலாம் என்று ஏங்கி கொ ண்டி ரு ந்த வ னு க்கு அ ன்றை க்கு ப ஸ் ஸ்டா ப் த ரி ச ன ம் கி ைட த்த து . ஆ னா ல் கூ ட ேவ அ டி ப் பிரசாதமும்.

“ நா ம்தா ன் த ப்பா க ஏ து ம் க ற்ப ைன ெச ய்து கொண்டிருந்தோமோ. அவள் உண்மையாகேவ தன்னை கவனிக்கவும், நிைனவில் கொள்ளவும் இல்லையோ. ஆனால் தன எதிரில் அவள் வந்தபோெதல்லாம் அவள்

4 | எஸ். ரேமஷ் கிருஷ்ணன்

முகத்தில் இருந்த புன்னைகக்கு என்ன அர்த்தமோ", இப்படிப் பல சிந்தைனயில் உழன்றவன் ெவறுைமயான மனதுடன் தூங்கிப் போனான்.

அதன் பிறகு அவ்வப்போது மனதிற்குள் வந்து படுத்திக் கொண்டிருந்தவைள வலுக்கட்டாயமாகத் தவிர்த்து வி ட்டு ம ற்ற வி ஷ ய ங்க ளி ல் ஈ டு ப ட்டு க் கொண்டிருந்தான்.

சில நாள் கழித்து மீண்டும் ைலப்ரரி. ஒரு புத்தகத்தை எடுத்து அங்கு ஓரமாக இருந்த ேடபிளில் உட்கார்ந்து புரட்டிக் கொண்டிருந்தான்.

ைலப்ரரியன் ெபண்ணின் ேடபிள் அவன் பார்வை படும் இடத்தில் இருந்தது.

புத்தகத்தில் கண்ணை கொஞ்ச ேநரம் ஒட்டியவன் நிமிர்ந்து பார்த்தபோது ைலப்ரரியன் முன்னால் முதுைகக்கு காட்டியபடி நின்றிருந்தவள் அவள்தான் என்று தோன்றியது. இன்றைக்கு சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமாக.

" ேட ய் வி ம ல் ேவ ண்டா ம் . ஏ ற்க ன ேவ ஒ ரு த ர ம் பட்டாச்சு. ரிஸ்க் எடுக்காத", மனசு எச்சரித்தது.

புத்தகத்தால் முகத்தை மூடியவன், கண்ணை மட்டும் அ வ ள் தி ைச யி லி ரு ந்து அ க ற்ற மு டி ய வி ல்லை . ைலப்ரரியன் அவளுக்கு நல்ல தோழி போல. கொஞ்ச ேந ர ம் க ல க ல ெவ ன்று சி ரி த்த ப டி ேப சி க்கொ ண்டி ரு ந்த வ ள் தி ரு ம்பி னா ள் . தி ரு ம்பி நடந்தவள் முகத்தில் அவன் முன்பு பார்த்துக் கிறங்கிய

சிரிப்பின் மிச்சம் | 5 அேத புன்னைக. அவன் கண்ணில் படும்படி இருந்த ஒரு ேர க்கி ல் இ ரு ந்த பு த்த க ங்க ைள ஆ ரா ய்ந்து கொண்டிருந்தவள் முகத்தில் கொஞ்சம் அதிகமான ேநரம் அந்தப் புன்னைக ஒட்டிக் கொண்டிருந்தது, அவனுக்கு இப்போது எல்லாம் புரிந்தது.

"சரி அதுதான் இல்லை என்று ஆகிவிட்டேத”, என்று விட்டேத்தியாக எழுந்தவன் அவள் புத்தகங்கைள மு ம்மு ர மாக ேத டி க் கொண்டி ரு ந்த போது ெம ல்ல ந ட ந்து ைல ப்ர ரி வா ச ைல த் தா ண்டி ெவ ளி ேய நடந்தான்.

"ஹலோ" என்று ஒரு குரல் ைலப்ரரி வாசலிருந்து ேகட்டது. திரும்பிப் பார்த்தபோது அவைன நோக்கி ேதவைத வந்து கொண்டிருந்தது.

பக்கத்தில் வந்தவள், "சாரிங்க. அன்னிக்கு நீங்க எதோ சொல்ல வந்திங்க. அதுக்குள்ளே அந்த ஆள் புகுந்து ஒங்கள அடிப்பார்னு எதிர் பார்க்கேவயில்லை. ஆனா ஒங்கள எங்கேயும் பாத்த மாதிரி என் ைமண்ட்ல ெரஜிஸ்டர் ஆகல. ஆனா நீங்க போனப்புறம் என் ம ன சு க்கு ரொ ம்ப க் க ஷ்ட மா யி ரு ந்த து . நீ ங்க ைலப்ரரிைய விட்டு ெவளிய வரும்போது உங்கைள கவனிச்சிட்டேன். சரி அதான் சாரி சொல்லலாம்னு கூப்பிட்டேன். ரொம்ப சாரிங்க,"

"நோ வொரிஸ். நீங்க என்னங்க பண்ணுவீங்க. தப்பு எம் ேமலதான். நான் உங்கைள ெரண்டு எடத்துல பாத்தது நிஜம்தான். ெரண்டு தடைவயும் நீங்க ேவற ஒருத்தங்ககிட்ட சிரிச்ச சிரிப்போட மிச்சத்தை உங்க

6 | எஸ். ரேமஷ் கிருஷ்ணன்

மு க த்தி ல பா த்து ட்டு நா ன் அ ைத எ ன க்கா ன புன்னைகயா ெநனச்சுகிட்டேன்."

ஓ! என்றவள் முகத்தில் ஒரு ெவட்கம் கலந்த புன்னைக.

"நீங்க அடிக்கடி இந்த ைலப்ரரிக்கு வருவீங்களா?" என்று உைரயாடல் ேமலும் தொடர , அவர்கள் புத்தக ரசைனயும் ஒத்துப்போகேவ, பரஸ்பர மொைபல் எண் பரிமாற்றத்தோடு அடுத்த அைர மணி ேநரம் சொர்க்கத் தருணங்களாகக் கழிந்தது.

"சரிங்க கிளம்பேறன்.அப்பறம் எப்ப சந்திக்கலாம்னு மொைபலில் கன்பார்ம் பண்ணிக்கலாம்." என்றவைனப் பார்த்துப் ெபரிதாகப் புன்னைகத்தாள்.

கொஞ்ச தூரம் போனவன் திரும்பி,

"இது எனக்கான முழுப் புன்னைகத்தாேன. ேவற சிரிப்பின் மிச்சமில்லைேய"

அவள் கலகல சிரிப்பின் சத்தம் ரொம்ப ேநரம் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.



பின்குறிப்பு: ேதவைதயின் ேபைர உங்கள் சாய்ஸுக்கே விட்டு விட்டேன்.

சிரிப்பின் மிச்சம் | 7

சமய விதி

05 ெசப்டம்பர், 1999 - மாைல 5 மணி

மத்திய தைரக்கடல் பகுதியில் உள்ள ெவஸ்ட் ேப ங்க் பி ரா ந்தி ய ம் இ ஸ்ரே ல் நா ட்டி ன் ப ல ந க ர ங்க ைள யு ம் , பா ல ஸ்தீ னி யா வி ன் சி ல நகரங்கைளயும் மற்றும் இந்த இருநாடுகளுக்கும் பொது வா ன ச ர்ச்சை க்கு ரி ய ப கு தி க ைள யு ம் உள்ளடக்கியது.

பரஸ்பரம் இரு நாட்டுத் தீவிரவாதிகளும் மற்றைய நா ட்டி ன் ப கு தி க ளி ன் மீ து ெவ டி கு ண்டு த் தாக்குதல்கள் நடத்துவது வாடிக்கையாக நடக்கும் வி ஷ ய ம் . இ ரு நா டு க ளு க்கி ைட ேய ேப ச்சு வா ர்த்தை க ளு ம் ஒ ரு ப க்க ம் ந ட ந்து கொண்டிருக்கும்.

அங்கு உள்ள பாலஸ்தீனிய நகரமான ெஹப்ரான். அராபியர்களான மொகமது, பஷீர் இருவரும் தீவிர ஆலோசைனயில்.



மொகமது , "பஷீர், நம்ம திட்டப்படி எல்லாம் சரியா நடக்குதா."

www.pachydermtales.com

9

www.ukiyoto.com

789354

901409

Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.